சேரனின் மூத்த மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா?

0
288

கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்த பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சேரன்.

இவர் இயக்கிய ஆட்டோகிராப் , தவமாய் தவம் இருந்து போன்ற படங்களுக்கு இப்போதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில் சேரனின் மூத்த மகளான நிவேதா பிரியதர்ஷினிக்கு, சுரேஷ் ஆதித்யா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமண விழாவில், சீமான், பாரதிராஜா, கே எஸ் ரவிக்குமார், சமுத்திரக்கனி, சிம்புதேவன், பாண்டிராஜ் எனப் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.