நீர் இணைப்புகளுக்கான கட்டணம் அதிகரிக்கும்; நீர் வடிகாலமைப்பு சபை

0
481

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் அதிகரிப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, புதிய நீர் இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்காக 16 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட கட்டணம் அறவிடப்படுகிறது.

இந்தநிலையில், புதிய அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.