சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பை ஏற்படுத்திய சம்பவம்: மன்னிப்பு கேட்ட ராகவா

0
249

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சந்திரமுகி – 2’ படத்தின் இசை வெளியீட்டு இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த விழாவைக் காண ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சி அரங்கில் கூடியிருந்தனர்.

அதில் சினிமா நட்சத்திரங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவர் ஒவருடன் தள்ளுமுள்ளு தகராறில் ஈடுபட்டுள்ளார். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு வெளியே இருவருக்குமிடையே நடந்த தகராறு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “சந்திரமுகி-2′ இசை வெளியிட்டு விழாவில் பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவருடன் சண்டை போட்ட சம்பவம் பற்றி இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது.

நிகழ்ச்சி உள்ளே நடந்ததால் நானும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தக் குழுவும் அரங்கின் உள்ளே இருந்தோம்.

அரங்கிற்கு வெளியில் நடந்த இச்சம்பவம் பற்றி எங்களுக்குத் தெரியாது. நான், மாணவர்கள் மீதும், அவர்கள் வளர்ச்சியின் மீதும் எவ்வளவும் அன்பும் ஆசையும் கொண்டவன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒருபோதும் இதுபோன்ற சண்டைகளை, வாக்குவாதத்தை நான் ஆதரிக்கமாட்டேன். எதுவாக இருந்தாலும் ஒருவரை அடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் மாணவர்களிடம் இதுபோன்ற நடந்திருக்கவேக் கூடாது. நடந்த இந்தத் தவறான சம்பவத்திற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

தயவு செய்து பவுன்சர்கள் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.