இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சிய நிலையத்தின் தலைவராக கடமையாற்றிய மொஹமட் உவைஸ் மொஹமட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பதவி விலகல் தொடர்பான கடிதம் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட மற்றும் தொழில்சார் பொறுப்புகள் காரணமாக அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
14 மாதங்களுக்கு முன்னர் மிகவும் சவாலான சூழ்நிலையில் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்ட உவைஸ் தனது பதவிக் காலத்தில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவைகளுக்காக அமைச்சர் நன்றி தெரிவித்தார்.