நூதன முறையில் இராஜினாமா கடிதம் வழங்கிய CFO அதிகாரி: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

0
323

பிரபல தொழிலதிரும் மிட்ஷி இந்தியா லிமிட்டின் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்த ரிங்கு பட்டேல் தனது இராஜினாமா கடிதத்தை நூதனமுறையில் வழங்கியமையானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் தான் மிட்ஷி இந்தியா லிமிட்டெட். இது காகிதம், பிளாஸ்டிக், மற்றும் உலோகப் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. கிட்டத்தட்ட 19 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனத்தில் ரிங்கு பட்டேல் என்பவர் சஜ அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தனது சொந்த காரணத்திற்காக அந்த நிறுவனத்தில் இருந்து விலக முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஒரு இராஜினாமா கடிதத்தை தனது கைபட எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த இராஜினாமா கடிதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எதற்காக அந்த இராஜினாமா கடிதம் வைரல் ஆகிறது என்றால் தனது மகனின் நோட்புக்கிலுள்ள பேப்பரை பயன்படுத்தி எளிமையான முறையில் இராஜினாமா கடிதத்தை எழுதி அதனை போட்டோ எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த இராஜினாமா கடிதம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் இராஜினாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Oruvan