கவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு குவிந்த திரையுலக பிரபலங்கள்

0
294

கவின் – மோனிகா ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் புகழ் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை 20ம் திகதி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் ஆடம்பரமே இல்லாமல் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதையடுத்து கவின் – மோனிகா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடன இயக்குனர் சதீஷ், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, யூடியூபர் இர்பான் கவினின் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.