கைது செய்யப்பட்ட யூரியூப்பர் கிருஸ்ணா மீது இன்று யாழ். மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அநேகமாக பிணை நிராகரிக்கப்பட்டு 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது. அல்லது 3 மாதங்கள் வரை சிறையிலடைக்க வாய்ப்புள்ளது.
ஜபிசி பாஸ்கரனால் ஆரம்பிக்கப்பட்டு கல்லா கட்டப்பட்ட உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஸ்ணா என்பவர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல் துறையினரிடம் ஒப்படைப்படடிருந்தனர்.
குறித்த யூரியூபர் பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளியொன்று வெளிவந்த நிலையில், அது சர்ச்சையாக மாறி இருந்தது. அத்தோடு இந்த விடயமானது நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கூட பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.
இந்த நிலையில் சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டிற்கு இன்றையதினம் யூரியூபர் வந்திருந்த வேளை ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் கிருஸ்ணா மீது இன்று மல்லாகம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.