கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம்: பழங்களை வெட்டும் கத்தியாக பயன்படுத்தி மாணவர்கள்

0
235

சீனா, பீஜிங் நகரில் பீஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக மாணவர்கள் விண்ணப்பம் செய்த நிலையில், 0.2 மில்லிமீட்டர் தடிமன் கொண்ட மெல்லிய கார்பன் இழை கொண்டு அச்சிடப்பட்ட சேர்க்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க அப்பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் இக்கடிதங்களை பழங்கள் மற்றும் இறைச்சியை வெட்டுவதற்காக பயன்படுத்துகின்றனர்.

மாணவர்கள் இக்கடிதங்களை பரிசோதிப்பதை நிறுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நவீன சாதனைகளை பிரதிபலிக்கும் கலைப் பொருட்களாக எண்ணி அவற்றை பாதுகாக்க வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்தால் வலியுறுத்தப்பட்டு வருகின்றனர்.

தமது ஆய்வகங்களில் உருவாகும் பொருட்கள் எந்தளவுக்கு நீண்ட ஆயுளையும் நம்பகத் தன்மையையும் கொண்டது என்பதைக் காட்டுவதற்காகவே இக்கடிதங்கள் அனுப்பப்பட்டதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.