IMF உடன்படிக்கை ரத்து செய்தால் 2025 பட்ஜெட் சமர்ப்பிக்க முடியாது – பந்துல

0
56

நிதி தொடர்பான தெரிவுக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா எம்.பி தெரிவிப்பதுபோல, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை இரத்து செய்தால் 2025 பட்ஜட் திட்டத்தைக் கூட முன்வைக்க முடியாது போகுமென போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்பாட்டில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தினாலும், நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாத நிலையே உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024 முதல் காலாண்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்தும் பலப்படுத்துவது தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.