பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது; அருச்சுனா எம்பிக்கு நோஸ் கட்!

0
55

பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என அருச்சுனா எம்பிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நோஸ் கட் செய்த சம்பவம் இன்று நாடாளும்ன்றில் இடம்பெற்றுள்ளது.

எனக்கு பதிலளிக்க நேரத்தை தரவும் இல்லை ​என்றால் குழப்பம் விளைவிக்கும் நபர்களை சபையில் இருந்து வெளியேற்றவும் என்றும் பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் இன்று (26) முன்னதாக கேள்வியெழுப்பிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, யாழ். மாவட்டத்தில் செய்த அபிவிருத்தி திட்டங்களின் ஒன்றை கூறுமாறு கேட்டார்.

இதனிடையே அமைச்சின் அறிக்கையை வாசிப்பதற்காக அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெயரை சபாநாயகர் அழைத்தார். அப்போது எதிரணியில் இருந்த சுஜீவ கேள்விக்கு பதில் இல்லையா? எனக் கேட்டார். எனினும் சுஜீவ உங்களையும் அந்த வாட்டுக்குத்தான் அனுப்ப வேண்டும் என அமைச்சர் பிமல் கூறினார்.

மறுபுறத்தில் இருந்த சுஜீவ எந்த வாட்டுக்கு என்று கேட்க பின்னர் கூறுகிறேன் என்றார் பிமல் இதனிடையே எழுந்த அர்ச்சுனா, கேள்விக்கு பதில் இல்லையா? எனக்கேட்டார்.

அதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பைத்தியங்களின் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது என்றும் சபையில் குழப்பங்களை ஏற்படுத்தும் நபர்களை உடனடியாக வெளியேற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.