மருந்து பொருட்களின் விலை தொடர்பில் வெளியாகிய வர்த்தகமானி இரத்து!

0
437
Pills macro

அரசாங்கத்தினால் 60 வகையான மருந்து பொருட்களின் விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் அஜித் திலகரத்ன இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் மருந்தக நிறுவனங்களின் ஊடாக தற்போது மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் வெகுவாக பாதிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.