மகளிர் உதைபந்து வரலாற்றில் சாதனை படைத்த கனடா வீராங்கனை

0
236

மகளிர் உதைபந்து வரலாற்றில் முதல்முறையாக ஒரு வீராங்கனை ஒரு மில்லியன் யூரோவிற்கு வாங்கப்பட்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த ஒலிவியா ஸ்மித் (20 வயது) லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ஆர்செனல் அணி ஒரு மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியுள்ளது.

20 வுமன்ஸ் சுப்பர் லீக் தொடரில் அறிமுகமானபோது ஒலிவியா ஸ்மித் 7 கோல்கள் அடித்தார். இவர் போர்வேடாக லிவர்பூல் அணியில் விளையாடுகிறார். இவர் விங்கராகவும் சென்டர் ஸ்டிரைக்கராகவும் விளையாடக் கூடியவர்.

கடந்த ஜனவரியில் அமெரிக்க வீராங்கனை நவோமி கிர்மா 0.94 மில்லியன் யூரோவிற்கு வாங்கியதே மகளிர் வரலாற்றில் அதிக சம்பளமாக இருந்து வந்தது. தற்போது ஒலிவியா ஸ்மித் இதனை முறியடித்துள்ளார்.