நடிகர் விஜய்க்கு இப்படி செய்யலாமா – அவரோடு நடிக்க மறுத்த மீனா…!

0
279

பேட்டி ஒன்றில் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை மீனா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவுக்கு அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதை அடுத்து அவருடன் வீரா, முத்து, எஜமான் உள்ளிட் திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.

Meena refused to act with a famous actor

விஜய் உடன் குத்தாட்டம் ஏன்?

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மீனா, ஷாஜகான் படத்தில் சரக்கு வச்சிருக்கேன் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியது ஏன்? என்ற ரசிகரின் கேள்விக்கு,

அது என்ன பாட்டு நாம் எப்படி ஆடப்போகிறோம் என்பது பற்றிய எந்த ஐடியாவும் எனக்கு இல்லை. ஆனால் அந்த பாடலில் விஜய்யுடன் போட்டி போட்டு ஆடியிருப்பேன் என கூறி சிரித்தார்.

Meena refused to act with a famous actor

மேலும் அந்த சமயங்களில் நான் மிகவும் பிசியாக இருந்தேன். விஜய் உடன் நடிக்க வந்த மேலும் இரண்டு வாய்ப்புகள் வேண்டாம் என கூறிவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.