கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலை 10 சதவீதம் குறைப்பு..

0
268

கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலையை 10 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இன்று (05.07.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் பலனை வாடிக்கையாளருக்கு வழங்கும் வகையில் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலையை குறைக்க உணவகம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் 10 சதவீதம் விலை குறைப்பு அமுலுக்கு வரும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ கேஸ் நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலையை குறைத்துள்ளது.

கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலைகள் குறைப்பு | Price Of Kottu And Rice Will Be Reduced Today

12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 204.00 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 83.00 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 37.00 ரூபாவினாலும் குறைக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.