திருகோணமலையில் இலவச நோன்பு கஞ்சி வழங்கிய பௌத்த பிக்கு

0
245

திருகோணமலையில் நோன்பு மாதத்தை கௌரவிக்கும் முகமாக நோன்பாளிகளுக்கு திருகோணமலை மஹதிவுல்வெவ பப்பதாராம விகாரையின் விகாரதிபதி சீல விசுத்தி பிக்குவால் இலவசமாக நோன்பு கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை ரொட்டவெவ மஸ்ஜிதுகள் ஹுதா ஜும்மா பள்ளிவாசலில் வைத்தே நேற்று முன்தினம் (13.04.2023) பிக்கு தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த செயற்பாட்டிற்கு மொரவெவ சிவில் சமூக அமைப்பு தனக்கு வழிகாட்டியாக இருந்ததாகவும் விகாராதிபதி சீல விசுத்தி இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

சகவாழ்வை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம்

நாங்கள் சிங்கள புத்தாண்டு வருடத்தை கொண்டாடி வருகின்றோம். இதேநேரம் நோன்பை நோக்கும் முஸ்லிம் சகோதரர்களும் இருக்கிறார்கள்.

சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக காணப்படுகின்றது. புத்தாண்டு தினத்தில் நோன்பு திறக்கும் நேரத்தில் இலவசமாக கஞ்சி கொடுக்கும் நடைமுறையை இம்முறை பின்பற்ற வேண்டும் என யோசித்தேன்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் பள்ளிவாயலுக்கு வருகை தந்தேன் எனவும் விகாரதிபதி சீல விசுத்தி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இலவச நோன்பு கஞ்சி வழங்கிய பௌத்த பிக்கு (Photos) | Buddhist Monk Gave Free Fasting Porridge