இந்தியாவில் பௌத்த ஊடக மாநாடு: புத்தரின் போதனைகளை ஊடகத்தில் பயன்படுத்த முன்மொழிவு

0
290

சர்வதேச பௌத்த சம்மேளனம் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்த பௌத்த ஊடக மாநாடு இந்திய தலைநகர் புதுடில்லியில் உள்ள விவேகானந்தா சர்வதேச மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள பல ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பௌத்த போதனைகளை ஊடக விரிவுரைகளுக்கு பயன்படுத்துதல், தொடர்பாடலுக்குப் பயன்படுத்துதல் மற்றும் பௌத்த போதனைகளை மோதலைத் தீர்ப்பதற்கும், துல்லியமான அறிக்கையிடலுக்கும் பயன்படுத்துவது தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டது.

உலகின் பல நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி பௌத்த சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், பௌத்தர்கள் மற்றும் பிக்குகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.