உடைந்த ஒலிம்பிக் பதக்கங்கள்; வெற்றி பெற்றவர்கள் கவலை

0
23

உடைந்த பதக்கங்களைச் சீர்செய்து கொடுக்க குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழு முன்வந்துள்ளது. இத்தாலியில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் தாங்கள் வென்ற பதக்கங்கள் உடைந்துவிட்டதாகச் சில விளையாட்டாளர்கள் குறைகூறியுள்ளனர்.

பனிச்சறுக்குப் போட்டியில் தங்கம் வென்ற பிரிஸி ஜான்சன் (Breezy Johnson) தமது உடைந்த பதக்கத்தைச் செய்தியாளர் கூட்டத்தின்போது காட்டினார். பதக்கம் வென்றவுடன் வெற்றியைக் கொண்டாடும்போது அது உடைந்துவிட்டதாக அவர் கூறினார்.

மேலும் சில விளையாட்டாளர்களும் அதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்நிலையில் அதற்குத் தீர்வு கிடைத்துவிட்டதாகப் போட்டியின் செயல்பாட்டுத் தகவல் இயக்குநர் தெரிவித்தார்.