இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் யாழ்.வரணி மத்திய கல்லூரிக்கு நேற்றைய தினம் (28-06-2023) விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பிரித்தானியாவில் பிறந்தவர்களும், சிறுவயதில் பிரித்தானியாவிற்கு சென்றவர்களுமாக 20 பேர் இந்த மாணவர் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
இதன்போது இந்த மாணவர் குழாத்தினரால் 6 லட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகாரணங்கள் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன.