பிரித்தானிய பல்கலைக்கழகம் இலங்கை மாணவர்களை உள்வாங்க தயக்கம்

0
601

இலங்கை மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் உள்ள ஹட்டர்ஸ்பீல்ட் பல்கலைக்கழகத்தில் பாடநெறிக்காக அண்மையில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த சேர்க்கை வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இதே மட்டத்தில் தொடருமானால், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.