பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சை பூர்த்தி

0
99

பிரித்தானியாவின் இளவரசி கேட் மிடில்டனின் புற்று நோய் சிகிச்சை பூர்த்தியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ஸின் இளவரசியும், இளவரசர் வில்லியம்ஸின் பாரியாருமான கேட் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

புற்று நோய் சிகிச்சை பூர்த்தியான நிலையில் படிப்படியாக பொது நிகழ்வுகளில் இளவரசி கேட் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதான இளவரசி கேட், புற்று நோயினால் பாதிக்கப்பட்டதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டில் சில நிகழ்வுகளில் கேட் பங்கேற்பார் எனவும் படிப்படியாக பொதுவாழ்க்கைக்கு இளவரசி கேட் திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.