யாழிற்கு வந்த பிரித்தானிய தூதுவர்!

0
332

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் இன்றையதினம் (23) யாழிற்கு விஜயம் மேற்கொண்டார்.

இன்று காலை யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்ற பிரித்தானிய தூதுவர் அதன் பின்னர் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் அங்கு ஆளுநருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.