ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் முதல் முறையாக உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா ஹெலிகாப்டர்களை வழங்கி உள்ளது.
பிரித்தானியாவில் பல அரசியல் மாற்றங்களுக்கு பிறகு நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் (Rishi Sunak), உக்ரைனுக்கு வலுவான ஆதரவை தெரிவிக்கும் விதமாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி-யை (Volodymyr Zelenskyy) தலைநகர் கீவ்வில் சமீபத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் சுதந்திரத்திற்காக போராடுவது என்றால் என்னவென்று பிரித்தானியாவிற்கு தெரியும் என்றும், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) மற்றும் உக்ரைனுடன் அனைத்து வழியிலும் பிரித்தானியா ஆறுதலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் (Rishi Sunak) உக்ரைன் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிரான போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா தங்களது ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைவர் தெரிவித்துள்ள தகவலில், உக்ரைனுக்கு மூன்று “சீ கிங்” (Sea King) ஹெலிகாப்டர்களை பிரித்தானியா அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் AFU 10,000 பீரங்கி குண்டுகளும் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.