பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மரியோ ஜகாலோ காலமானார்: 1958 அணியில் உயிருடன் இருந்த இறுதி வீரர்!

0
306

கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளராக நான்கு உலகக் கிண்ணங்களை வென்ற பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மரியோ ஜகாலோ (Mario Zagallo) தனது 92 வயதில் காலமானார். மரியோ ஜகாலோ 1958 மற்றும் 1962 இல் இரண்டு உலகக் கிண்ணங்களை வென்ற பிரேசில் அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

பீலே, ஜெய்ர்சினோ மற்றும் கார்லோஸ் ஆல்பர்டோ உட்பட தலை சிறந்த கால்பந்து ஜாம்பவான்கள் உலகில் உதயமாகிய காலத்தில் பிரேசில் அணியின் நிர்வாகியாக அவர் இருந்தார்.

Oruvan

கடேசியாக 1994 இல் கார்லோஸ் ஆல்பர்டோ பரேரா உதவிப் பயிற்சியாளராக நியமனம் பெற்ற போதும் பிரேசில் அணியின் நிர்வாகியாக அல்லது தலைமை பயிற்சியாலராக ஜகாலோ இருந்தார் என்பதுடன் அந்த உலகக் கிண்ணத்தையும் பிரேசில் அணியே வெற்றிக் கொண்டது.

அந்த போட்டிக்குப் பின்னர் பிரேசில் அணியின் மேலாளராக ஜகாலோ நியமிக்கப்பட்டதுடன் 1998 பிரேசில் அணி இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் மேலாளராகவும் உலகக் கிண்ணத்தை வென்ற முதல் நபர் மரியோ ஜகாலோ ஆவார்.

ஜகாலோவின் மரணத்துடன் 1958 இறுதிப் போட்டியில் விளையாடிய பிரேசில் அணியில் எவரும உயிருடன் இல்லை என பிரேசில் கால்பந்து நிர்வாகம் அறிவித்துள்ளது.