இதுவரை வெளியுலகம் காணாத வட கொரியாவின் புத்தம் புதிய புகைப்படங்கள்!

0
49

வட கொரியா கடுமையான சட்டங்களையும், அதிக சமூக கட்டுப்பாட்டையும் மக்கள் மீது கொண்ட நாடாக விளங்குகிறது. வட கொரிய மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வாழ்வாதாரம், சமூக நிகழ்வுகள் என என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்குத் தெரியாத அளவுக்கு அதிக தணிக்கை விதிமுறைகளும் அந்நாட்டில் உள்ளது. 

மக்கள் சுதந்திரமாக இல்லை என சர்வதேச சமூகத்தில் பொதுவான கண்ணோட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் வட கொரியாவில் இதுவரை வெளியுலகுக்குத் தெரியாத கட்டமைப்புகள் மற்றும் இடங்களின் புகைப்படங்களைச் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. 

குறித்த புகைப்படங்களில் தென் கொரியாவிலிருந்து காணும் தூரத்தில் உள்ள Gijungdong கிராமம், Liaoning மாகாணத்தில் Dandong பகுதியிலிருந்து பார்க்கக்கூடிய தூரத்தில் உள்ள Sinuiju பகுதி உள்ளிட்ட பல பகுதிகள் இடம்பெற்றுள்ளன.