இலங்கை அரசியல் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள் 94ஆவது வயதில் காலமானார். பிராட்மன் வீரக்கோன் இலங்கையின் பல ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களின் செயலாளராகப் பணியாற்றியவர் வீரக்கோன் அவர்கள் கொள்கை வடிவமைப்பு, நிர்வாகத்திறன் மற்றும் நாட்டு முன்னேற்றத்தில் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கியவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
அவரது பணித்திறன், நேர்மை மற்றும் நாட்டு சேவைக்கு நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பணிமனப்பான்மையின் மூலம் அவர், இலங்கை நிர்வாக வரலாற்றில் ஓர் ஆளுமை மிக்க நபராக விளங்கினார். இந்நிலையில் அவரது மறைவு இலங்கை அரசியல் மற்றும் நிர்வாகத் துறையில் ஒரு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.