பாகிஸ்தானில் 900 அடி உயரத்தில் தொங்கிய சிறுவர்கள்!

0
239

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில், ஆறு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் கேபிள் காரில் சிக்கி அந்தரத்தில் மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு கேபிள் காரில் சிக்கி கொண்டவர்களை மீட்கும் பணியில் இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தெரிவிக்கையில், அந்த 8 பேர் குழு பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது கேபிள் கார் ஒன்று அறுந்து தரையில் இருந்து 900 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இராணுவ ஹெலிகாப்டர்கள் கேபிள் காரை அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

900 அடி உயரத்தில் தொங்கிய சிறுவர்கள்! அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் | Cable Car Rescue Eight People Trapped

ஆபத்தான பயணம்

இதனிடையே, சுமார் 4 மணிக்கு நேரத்திற்கு பின்னர் தான் மீட்பு ஹெலிகொப்டர் சம்பவ இடத்திற்கு சென்று சேர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்தரத்தில் சிக்கிய மாணவி ஒருவர் கடந்த 3 மணி நேரத்திற்கு முன்னர் மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்தரத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, பலத்த காற்று வீசியதால் மீட்பு நடவடிக்கைகளில் காலதாமதமும் சிக்கலும் ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தினமும் சுமார் 150 பேர் கேபிள் கார் மூலம் பாடசாலைக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர் என உள்ளூர் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.