இந்தியாவின் முன்னனி தொழில் அதிபரும் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிலையில் அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக பிரமாண்டமாக கடந்த வாரம் நடந்தது. இந்த திருமணத்தில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் எக்ஸ் தள பதிவு ஒன்றில், அம்பானியின் இல்ல திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால் நாளை பாதி உலகமே தலைகீழாக மாறிவிடும் என்று மனம் நினைத்துக்கொண்டு இருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து மும்பை பொலிஸார் அம்பானியில் இல்ல திருமணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.