கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்; இந்துக்கள் மீது அதிகரிக்கும் வன்முறை

0
23

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பங்களாதேஷில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில் நேற்றும் ஒரு இந்து கொலை செய்யப்பட்டு உள்ளார். மவுல்விபசார் மாவட்டம் சம்பா பகுதியில் தேயிலை தோட்டத்தில் 28 வயதுடையவர் பணி புரிந்து வந்தார். இவர் கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளார்.

அவரது உடலில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.