கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

0
839
Dead body in a mortuary

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய லாலசிங்கம் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் ,அது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.