இரத்தக்களரியாகவுள்ள இலங்கை! கோட்டாபயவின் பதவிக்கு ஆபத்து? ஜோதிடரிடம் கணிப்பு

0
1199

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான நெருக்கடி நிலை எதிர்வரும் ஜூலை 09 மற்றும் அன்றைய திகதியுடன் தொடர்புடைய சில நாட்களில் மிகவும் தீவிரமடையும் என்று ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாதம் 09ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் இலங்கையில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.