கோடீஸ்வரர்கள் உயிரிழப்பு; டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் விசாரணை

0
202

1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்றபோது கோடீஸ்வரகள் உபட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியைனை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் அவர்கள் பயணம் செய்த டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததற்கான காரணத்தை கண்டறிய அமெரிக்க கடலோர காவல்படை தற்போது விசேட விசாரணையை தொடங்கியுள்ளது.

கோடீஸ்வரர்கள் உயிரிழப்பு; டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் விசேட விசாரணை | Billionaires Death Investigation Submarine Titan

அமெரிக்க, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் விசேட விசாரணை

அதன் தலைமைப் புலனாய்வு அதிகாரி கேப்டன் ஜேசன் நியுபவர், டைட்டன் ஆய்வு எதிர்கால துயரங்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்றார்.

அதோடு இந்த விசாரணையில் கனடா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இணைந்துள்ளன. முன்னதாக, கப்பல் விபத்துக்குள்ளான டைட்டானிக் அருகே 300 மீட்டர் பகுதியில் டைட்டானிக்கின் ஐந்து முக்கிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உரிமையாளரான ஓஷன் கேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரிட்டிஷ் கோடீஸ்வர தொழிலதிபர் ஹமிஷ் கார்டிங், பாகிஸ்தான் அதிபர் ஷஷாதா டவுட், பிரெஞ்சுக்காரர் பால் ஹென்றி நஜூல், டைட்டன் ஆபரேட்டர், ஓஷன் கேட் சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் (61) ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.