அடுக்கடுக்காக ரூல்ஸ் போட்ட பிக் பாஸ்; ஆரம்பமே இப்படியா?

0
237

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ காலை 9 மணிக்கு வெளியானது.

முதல் ப்ரோமோவில் வீட்டின் முதல் தலைவராக இருக்கும் விஜய் வர்மாவைக் கவராத போட்டியாளர்கள் என ரவீனா, வினுஷா, நிக்சன், ஐசு, அனன்யா, பவா செல்லத்துரை ஆகிய 6 போட்டியாளர்கள் இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதையடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதில் ஒவ்வொரு வாரமும் ஆறு போட்டியாளர்கள் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறிய வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அந்த 6 பேரும் பின்வரும் விதிமுறைகளைக் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

சிறிய வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குச் செல்லக்கூடாது. எந்த டாஸ்க்கிலும் பங்கு பெற கூடாது, ஷாப்பிங் போகக் கூடாது, மூன்று வேளைக்கான மெனுவை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தேர்வு செய்வார்கள்.

அதைத்தான் அவர்கள் சமைக்க வேண்டும். பிக்பாஸ் வீட்டின் ஹவுஸ் கிளீனிங் மற்றும் பாத்ரூம் கிளீனிங் வேலைகளை சிறிய வீட்டில் இருப்பவர்கள் தான் செய்ய வேண்டும் என அடுக்கடுக்கான ரூல்ஸ்களை போட்டு போட்டியாளர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளார். இந்த ப்ரோமோவைப் பார்த்த முதல் நாளே நிகழ்ச்சி சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.