பிக்பாஸ் சீசன் 7; கமல்ஹாசனின் மிரட்டல் ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி

0
257

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கடந்த சீசனில் ஆரம்பிக்கலாமா என அலப்பறை கொடுத்த கமல்ஹாசன் நிசப்தமான கடலின் நடுவே நின்று கொண்டு பிக்பாஸ் சீசன் விரைவில் என பார்வையில் அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை முன்னதாக நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெற்றிருப்பதாக தகவல் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.