தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை தாண்டி கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்த்திராத விதமாக இலங்கை பெண்ணான ஜனனி பிக்பாஸ் வீட்டினை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் வெளியில் வந்த ஜனனி பிரபல யூடியூப் சேனல் ஒன்று பேட்டிக்கொடுத்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
பேட்டியில், வீட்டில் நான் நானாகத்தான் இருந்தேன். சனிக்கிழமை வந்தால் யாருப்பா கேஸ்-கார் என்று நினைத்த போது நான் தான் அந்த கேஸ் காரர்-ஆ இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சின்ன பொண்ணுன்னு சொல்லியே விளையாடவிடாமல் பண்ணிட்டாங்க.
அதனால் தான் அண்ணா, அக்கான்னு கூப்பிடுவதை விட்டுவிட்டு விளையாட ஆரம்பிக்க யோசித்தேன். வெளியில் வந்து அண்ணா, அக்கான்னு கூப்பிட்டுக்கலாம் என்று பகிர்ந்துள்ளார்.
எனக்கு பின் பேசியவர்களின் வீடியோவை நான் பார்க்கவில்லை. ஆனால் என் நண்பர்கள் கூறினார்கள் அவங்க இப்படி பேசினாங்க என்று என தெரிவித்துள்ளார்.