Bigg Boss Breaking; திடீரென்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லதுரை

0
245

பிக்பாஸ் வீட்டை விட்டு பவா செல்லதுரை வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள், 120 கேமராக்கள், என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமானது.

40 நாட்களுக்கு பின்பு நடக்க கூடிய பிரச்சினைகளை நான்கே நாட்களில் நடந்திருப்பதால் நிகழ்ச்சி மீதான எதிர்ப்பார்ப்பு எகிறி வருகின்றது. இந்த நிலையில் திடீர் டுவிஸ்ட் ஆக எழுத்தாளர் பவா செல்லதுரை தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

Bigg Boss Bava

முதற்கட்ட தகவல்படி அவர் உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் அவர் சொல்லிய ஒரு சில கதைகளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் மிகவும் இறுதி வரை போட்டியாளராக பவா இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் ஒரே வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது.