முக்கிய அதிகாரிகளுடன் பைடன் அவசரசந்திப்பு!

0
131

ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பைடன் தனது முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடும் படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இரண்டு மணித்தியாலங்களிற்கு மேல் பைடன் தனது முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

ஈரானிடமிருந்தும் அவர்களின் சகாக்களிடமிருந்தும் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ஆபத்திலிருந்து அந்த நாட்டை பாதுகாக்கும் எங்கள் உறுதிப்பாடு மிகவும் வலுவானது என பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் பிரதமரை தொடர்புகொள்ளவுள்ளார்.