ஈரான் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ளது. நேற்று ஈரானை, இஸ்ரேல் தாக்கிய பிறகு தற்போது மோதல் வலுத்துள்ளது. ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் இஸ்ரேலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கிறது.
இந்நிலையில் தான் ஈரானை அடிக்கும் முன்பு இஸ்ரேல் பிரதமர் யூதர்களின் புனித இடமான மேற்கு சுவருக்கு சென்று பிரார்த்தனை செய்து சுவர் இடுக்கில் பைபிள் வசனம் எழுதி வைத்து சபதமேற்ற நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானை தாக்குவதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, ஜெருசலேம் நகரில் உள்ள ‛வெஸ்டன் வால்’ என்று அழைக்கப்படும் பழமையான மேற்கு சுவரில் அவர் பிரார்த்தனை செய்தார்.
ஜெருசலேமில் உள்ள மேற்கு சுவர் யூதர்களுக்கு மிகவும் புனிதமான இடம். இங்கு பிரார்த்தனை செய்யும் யூதர்கள் குறிப்பு எழுதி சுவர் இடுக்கில் வைப்பது வழக்கம். அதன்படி பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பு ஒன்றையும் எழுதி மேற்கு சுவரின் இடுக்கில் வைத்தார்.
இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் வெளியாகின. தற்போது ஈரான் மீதான தாக்குதல் வெற்றிகரமாக முடிந்த நிலையில் நெதன்யாகு எழுதிய குறிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால் ஒரு பைபிள் வசனம். ‛இதோ, ஒரு மக்களினம். அது ஒரு பெண் சிங்கம் போன்று எழும்புகிறது. ஒரு சிங்கம் போன்று அது தன்னை உயர்த்துகிறது. இரையை விழுங்கி கொலையுண்டதின் இரத்தத்தை குடிக்கும் மட்டும் அது படுப்பதில்லை’ என்று எழுதியுள்ளார்.