பவதாரிணியின் குரல் மக்கள் இதயங்களில் இருந்து எப்போதும் மறையாது.. நடிகர் சிம்பு இரங்கல்

0
321

இளையராஜாவின் மகள் பவதாரிணி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகி என பல விஷயங்களை செய்து வந்தவர். அவருக்கு 47 வயது மட்டுமே ஆகும் நிலையில் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

அவருக்கு இலங்கையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருக்கிறார். அவரது மரணம் தமிழ் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மறக்கவே முடியாது.. சிம்பு உருக்கம்

இந்நிலையில் நடிகர் சிம்பு பவதாரிணி மறைவுக்கு உருக்கமாக X தளத்தில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

மாநாடு படத்தில் வரும் ‘மாஷா அல்லா’ பாடலை பவதாரிணி பாடி இருந்தார். அவரது குரல் மக்கள் இதயங்களில் இருந்து எப்போதும் மறையாது என சிம்பு கூறி இருக்கிறார்.