முக்கிய அமைச்சுக்களை குறி வைக்கும் பசில்!!

0
179

சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுக்களை பெற்றுக்கொள்ள பொதுஜன பெரமுன கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் தமது கோரிக்கையை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்டத் தலைவர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரவு செலவுத்திட்டம்

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் குழுக்கூட்டமொன்றுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய அமைச்சுக்களை குறி வைக்கும் பசில்: ரணிலுடன் மந்திராலோசனை | Sri Lanka New Cabinet Ministers Today

அதற்கமைய, அனுராதபுரம், களுத்துறை, கண்டி, நுவரெலியா, அம்பாறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்ட தலைவர்கள் குழுவொன்று இந்த சந்திப்பிற்கு தயாராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் மாற்றம் 

அதற்கமைய, வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே பொதுஜன பெரமுன கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளதென தெரியவந்துள்ளது.

முக்கிய அமைச்சுக்களை குறி வைக்கும் பசில்: ரணிலுடன் மந்திராலோசனை | Sri Lanka New Cabinet Ministers Today

இதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.