தமிதா மற்றும் கணவருக்கு பிணை

0
122

பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.