தரமற்ற மருந்துகள்! வீதிக்கு இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானம்

0
245

தரமற்ற மருந்துகளில் இருந்து நோயாளர்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அகில இலங்கை தாதியர் சங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று (17.06.2023) முதல் நாடு கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்திசாலைகளுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்களை அந்த சங்கம் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த கூறுகையில், நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

இதற்காக வீதிக்கு இறங்கி போராட்டங்களை முன்னெடுக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,