அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்து வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. ஹொரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகிய இத் திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகும் என ஏற்கனவே இயக்குநர் கூறியிருந்தார்.
இந்நிலையில் இத் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி ஆகியோர் நடிக்கின்றனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்யும் இத்திரைப்படம் ஓகஸ்ட் 15ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



