ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் மனைவி வினிக்கு இந்திய முறைப்படி வளைகாப்பு இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமனுக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.
இவர் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 வயதான மேக்ஸ்வெல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது காதலியை கரம் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது வினி ராமன் கர்ப்பமாகியுள்ளார். அதனால் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.




