நடிகை நிவேதா பெத்துராஜ் டால்பின் ஸ்போர்ஸ் மேனேஜ்மெண்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பில் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
யார் இந்த சிங்கப்பெண்?
சினிமா நடிகைகளை படங்களிலேயே சரியாக பயன்படுத்தப்படுவது இல்லை என்கிற விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் சினிமாவை தாண்டியும் சாதனைகளை செய்து வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்ற நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இப்படத்தினை தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ளார். தெலுங்கில் மெண்டல் மதிலோ, சித்ரலேகாரி, ப்ரோச்சேவரவருரோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
சினிமாவை தாண்டி பல சாதனைகளையும் செய்து வருகிறார். மிக்ஸ்ட் டபுள்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பாக விளையாடிய நிவேதா பெத்துராஜ் கோப்பை மற்றும் பதக்கத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
பி.வி. சிந்து போல பேட்மிண்டன் விளையாட்டிலும் நிவேதா பெத்துராஜ் அசத்துறாரே… விரைவில் அவரையும் ஓரம் கட்டி விடுவார் போல என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Badminton mixed double champions 🏆 pic.twitter.com/evJQV2BrCG
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) January 23, 2024