விருது பெற்ற இந்திய கனேடிய திரைப்பட இயக்குநர் ஒருவர், கனடாவின் சர்ரேயில் கொல்லப்பட்டுள்ளார்.
மணி அமர் (Mani Amar 40) என்று அழைக்கப்படும் அந்த இயக்குநர், அக்கம்பக்கத்தவர்களுக்குள் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக மட்டும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மணி அமர் திரைப்பட இயக்குநர் மட்டுமல்ல, ஆசிய இளைஞர்கள் வன்முறை குழுக்களில் இணைந்து கெட்டுப்போவதற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலரும் ஆவார்.




