வருடாந்த வரிசையை தொடங்கிய ஆஸ்திரேலிய சிவப்பு நண்டுகள்….

0
2183

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிவப்பு நண்டுகள், தங்களது வருடாந்திர வலசை பயணத்தை தொடங்கியுள்ளன.

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நிறத்தில் நண்டுகளாக காணப்படுகின்றது.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கிறது.

ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு வெளியேறி, வழிப்பாதையில் அவர்களது துணையான பெண் நண்டுகளையும் சேர்த்துக்கொண்டு கடலுக்கு புறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலுக்குச் சென்ற நண்டுகள் ஒவ்வொன்றும் முட்டைகளையிடும்.

அந்த முட்டைகள் பொறித்ததும், அவற்றிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து தங்கள் வீடான காடுகளை நோக்கி செல்கிறது. லட்சக்கணக்கான குஞ்சுகள் முட்டைகளில் இருந்து வெளிவருகிறது.

அணிதிரட்டி செல்லும் சிவப்பு நண்டுகள்; வழிவிட்டுச்செல்லும் ஆஸ்திரேலிய மக்கள்! | Swarming Red Crabs Wayward Australian People

ஆனால் அவற்றில் அதிகமானவை மீன்கள் போன்ற கடல் உயிரினங்களுக்கு உணவாகி விடுகிறது. அது போக மீதம் இருக்கும் நண்டுகள் தான் காட்டிற்கு சென்றடைகிறது. எனவே தான், அரசு அலுவலர்கள், நண்டுகளின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

நண்டுகள் பாதுகாப்பாக கடலுக்கு செல்ல பாதை அமைத்திருக்கிறார்கள். சுற்றுலா பயணிகளையும் சாலையோரமாக வாகனங்களை நிறுத்துமாறு கூறி, நண்டுகள் செல்வதை பார்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நண்டுகள் பத்திரமாக இனப்பெருக்கம் செய்வதற்காக, கடலுக்குச் செல்வதற்கு பாதுகாப்பான வழி அமைத்துக்கொடுக்கிறார்கள்.