இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் இலங்கையின் பூர்வீக சமூகத்தலைவர் உருவுவாரிகே வன்னியலெட்டோவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (30.08.2023) இடம்பெற்றுள்ளது.
ஆதிவாசி சமூகத்தை சந்தித்து அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய சவால்கள் பற்றி அறிந்துகொள்வது பெருமையாக இருப்பதாக உயர்ஸ்தானிகர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பூர்வீக சமூகத்துடன் பேச்சுக்களை நடத்தியதுடன் அவர்களின் வரலாறு மற்றும் தற்போதைய சவால்கள் பற்றி அறிந்து கொண்டுள்ளேன்.

அவுஸ்திரேலியாவின் முதல் மக்கள்
அவுஸ்திரேலியாவின் சமூகங்கள் பல்வேறுபட்ட தனித்துவமான பழங்குடியினர் மற்றும் தீவுகளின் குழுக்களால் உருவாக்கப்படுகின்றன.
இந்தநிலையில் அந்த சமூகங்கள் அவற்றின் சொந்த கலாசாரம், மொழி, நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை பின்பற்றுகின்றன.
இதேவேளே பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஜலசந்தி தீவு மக்கள் அவுஸ்திரேலியாவின் முதல் மக்களாவர். அவர்கள் காலனித்துவத்திற்கு முன்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு வாழ்கின்றனர்.
நிலையான வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புவதற்கு ஆஸ்திரேலியாவின் முதல் நாடுகளின் சமூகங்களுடன் இணையாக இருப்பதைக் காண்கிறேன் என தெரிவித்துள்ளார்.


