சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு தடை!

0
125

ஆஸ்திரேலிய நாட்டில் குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தற்போது செல்போன் மற்றும் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், முகநூல் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக நிலையில் ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. 

இது தொடர்பில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறியதாவது,

குழந்தைகளை அவர்களின் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலக்கி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் பார்க்க விரும்புகிறேன்.

அவர்கள் உண்மையான நபர்களுடன் உண்மையான அனுபவங்களைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனென்றால் சில சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. 

சமூக ஊடகங்களில் உள்ள தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் தாக்கங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பது கவலை அளிக்கிறது. 

எனவே குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.