அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின் ஆரம்ப நிகழ்வை கொண்டாட பலர் கூடியிருந்த பகுதியில் குறித்த யூத நிகழ்வை இலக்காகக் கொண்டு, இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஎநிலையில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பொலிஸ் காவலில் இருப்பதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




