ஜெருசலேமின் அங்கீகார அறிவிப்பை திரும்பப் பெற்றது ஆஸ்திரேலியா!

0
466

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்ததை திரும்பப் பெறுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இருநாடுகளும் ஜெருசலேமை தங்கள் தலைநகராகக் கூறுகின்றனர். 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரில் ஜோர்டானிடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது.

அதன் பின் தங்கள் நாட்டின் ஒரு நிரந்தர பகுதியாக அப்பகுதியை அறிவித்தது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில், ஜெருசலேம் விவகாரம் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் கடைசியாக நடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னர், அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த தொழிலாளர் கட்சி, தங்கள் வாக்குறுதிகளில் ஒன்றாக இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலேம் இருப்பதை ஆஸ்திரேலியா அங்கீகரிப்பதாக எடுத்த முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

ஆஸ்திரேலியாவில் இப்போது ஆளுங்கட்சியாக உள்ள பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி, ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசனின் கீழ் எடுக்கப்பட்ட முடிவு திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்தது என்ற செய்தி வெளியானது.

ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மந்திரி பென்னி வோங் இதனை மறுத்துள்ளார். அத்தகைய முடிவை அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

ஜெருசலேம் விவகாரம் அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியா இஸ்ரேலின் நீண்டகால நட்பு நாடாகவும் வலுவான ஆதரவாளராகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.